அன்பான தமிழ் உறவுகளே !
எம்மவர்கள் உலகமெங்கும் பரந்து வாழ்ந்தாலும் நாம் யார் என்று பிற சமூகத்தவர்க்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கலை கலாச்சார அடையாளங்களை மறந்து வருகிறோம்.
நமது கலை கலாச்சாரங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் முயற்சியாகவே இவ் இணைய ஓவியக் கண்காட்சியினை ஆரம்பித்துள்ளோம். உலகப் புகழ் பெற்ற ஓவியங்களின் வரிசையிலே எம்மவர்களின் ஓவியத்தினையும் உலாவரச் செய்வதற்கு எல்லோரும் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என யாழ் அம்மா குழுமத்தினர் அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ் ஓவியக் கண்காட்சியூடாக எமது கலை காலாச்சாரப் பண்பாடுகளின் அடையாளங்களைப் பிற சமூகத்தினருக்குத் தெரியப்படுத்தலாம். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் பங்குபற்றலாம். ஓவியத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இப் போட்டியில் இணைந்துகொண்டு உங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் எனத் தெரியப்படுத்துகிறோம்.


முக்கிய குறிப்புகுறிப்பு 1

ஓவியங்கள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் எல்லா ஓவியங்களும் எமது இணையத்தில்
பிரசுரிக்கப்படும்.

குறிப்பு 2

ஓவியங்களுக்கு அனைவரும் ஆக்க பூர்வமான கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து உங்களது ஆதரவினை வழங்கலாம்.

குறிப்பு 3

ஓவியங்களில் முதன்மை பெறுபவை இணையத்தில் முதன்மையான இடத்தை பெற்றுக் கொள்ளும்.

குறிப்பு 4

அனைத்துலக ரீதியில் போட்டியில் முதலிடம் பெறுபவர் கௌரவிக்கப்பட்டு யாழ் அம்மா குழுமத்தில் பிரதான ஓவியராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

குறிப்பு 5

அனைத்து நாடுகளில் வாழ்ந்து வருபவர்களும் எமது குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் இலகுவாகப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.போட்டி விதிமுறைகள்தொடர்புக்கு
Address:

Badenerstrasse 281, 8003 Zürich
Switzerland